கடலில் தத்தளித்த நாகப்பட்டினம் மீனவர்கள் 9 பேர் 6 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு
புதுச்சேரி இந்திய கடலோரக்காவல் படை அலுவலகத்துக்கு சனிக்கிழமை இரவு 12 மணிக்கு தமிழ்நாடு மரைன் போலீஸôரிடம் இருந்து கடலில் நாகப்பட்டினம் மீனவர்கள் 9 பேர் படகு என்ஜின் கோளாறு
புதுவை அருகே என்ஜின் கோளாறு, டீசல் தீர்ந்ததால் கடலில் தத்தளித்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் 9 பேர் இந்திய கடலோரக் காவல்படையால் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர்.
புதுச்சேரி இந்திய கடலோரக்காவல் படை அலுவலகத்துக்கு சனிக்கிழமை இரவு 12 மணிக்கு தமிழ்நாடு மரைன் போலீஸôரிடம் இருந்து கடலில் நாகப்பட்டினம் மீனவர்கள் 9 பேர் படகு என்ஜின் கோளாறு மற்றும் டீசல் தீர்ந்து விட்டதால் கடலில் தத்தளிப்பதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் இருந்து இந்திய கடலோரக் காவல்படை கேப்டன் என்.ஆர். குமார், படைவீரர்கள் ஸ்ரீநாத், எஸ்கே.மேத்தா, வருண்குமார் கொண்ட படையினர் விரைவு மீட்பு படகு மூலம் இரவு 12.30 மணிக்கு நவீன தொழில்நுடப் சாதனங்கள், மற்றும் 25 லிட்டர் டீசலுன் புறப்பட்டுச் சென்றனர்.பின்னர் புதுவை கலங்கரை விளக்கம் அருகே 23 கடல் மைல் தொலைவில் நடுக்கலில் தத்தளித்துக் கொண்டிருந்த அதிகாலை 2.30 மணிக்கு பாதிக்கப்பட்ட படகை அடையாளம் கண்டனர்.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த படகு உரிமையாளர் ராஜேந்திரன், சதீஷ், சிவா, பாலகிருஷ்ணன், பழையாரைச் சேர்ந்த மகேந்திரன், நாகூரைச் சேர்ந்த பாலு, ராஜி, நம்பியார் நகரைச் சேர்ந்த அப்பு, அரவிந்த் எனத் தெரிந்தது. அவர்களுக்கு தேவையான முதலுதவி செய்த இந்திய கடலோரக் காவல்படை வீரர்கள், பின்னர் என்ஜின் கோளாளரை சரி செய்தனர். 25 லிட்டர் டீசல் வழங்கி மீன்பிடி படகை புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6 மணிக்கு கொண்டு வந்தனர்.அப்படகு 55 அடி நீளமும், 4 மீட்டர் உயரும் கொண்டது.
ஆனால் தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகம் தற்போது 2 மீட்டர் ஆழகே கொண்டதால் இப்படகு துறைமுகத்தில் நுழைய முடியவில்லை. இதனால் வம்பாகீரப்பாளையம் அருகே கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டது. 25 லிட்டர் டீசலும் புதுவைக்கு வருவதற்கே போதுமானதாகி விட்டதால் நாகப்பட்டினம் செல்ல மேலும் டீசல் வாங்க மீனவர்களுக்கு உதவி செய்யப்பட்டது.
6 மணி நேரப் போராட்டத்துக்கு பின் 9 மீனவர்களை புதுச்சேரி இந்திய கடலோரக் காவல்படையினர் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.