முகப்பு
தற்போதைய செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை: சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பு

கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.1250 வீதம் அபராதம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வழக்கில் 4 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ.1250 வீதம் அபராதம் விதித்து சிதம்பரம் உதவி அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சிதம்பரம் அருகே சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்த கொடிகருப்பன் (25). சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இவர் கடந்த 13-4-12 ஆண்டு சொந்த ஊருக்கு வந்துள்ளார். அப்போது கிரிக்கெட் விளையாடும் போது அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் (26) என்பவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கொடிகருப்பன் சென்னைக்கு செல்ல சதீஷ் வீட்டின் வழியாக சென்றுள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த சக்திவேல் (46), காவேரி (45), ரமா (33) ஆகிய மூவரும் கொடிகருப்பனை பிடித்துக் கொள்ள, சதீஷ் பிச்சுவா கத்தியால் மார்பில் மற்றும் பல்வேறு குத்திவிட்டு தலைமறைவாயினர். இதில் படுகாயமுற்ற கொடிக்கருப்பன் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து கொடிகருப்பன் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கண்ட நால்வரையும் கைது செய்து சிதம்பரம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வந்தனர். அரசு தரப்பில் வழக்குரைஞர் ஏ.நடனம் வாதாடினார். வழக்கு விசாரணை முடிவுற்று நீதிபதி ராதிகா திங்கள்கிழமை தீர்ப்பு அளித்தார். குற்றம் நிருப்பிக்கப்பட்டதால் எதிரிகள் சதீஷ், சக்திவேல், காவேரி, ரமா ஆகியோருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1250 அபராத தொகையும் விதித்து நீதிபதி ராதிகா தீர்ப்பு அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.