தற்போதைய செய்திகள்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் மீது போலீஸ் வழக்குப்பதிவு

பேராசிரியர் பணிக்கு பணம் வாங்கி ஏமாற்றியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் மீது நாகமலைப்புதுக்கோட்டை போலீஸார்

ஜெயப்பாண்டி

பேராசிரியர் பணிக்கு பணம் வாங்கி ஏமாற்றியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக டீன் மீது நாகமலைப்புதுக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.

 மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது ஜோதிநாயக்கனூர். இவ்வூரைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தாற்காலிகப் பணியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 பல்கலைக்கழகத்தில் நிரந்தரப் பேராசிரியர் பணிக்காக கல்வி வளர்ச்சிக்குழு டீன் ஜெயக்கொடியிடம் ரூ.16 லட்சம் அளித்ததாகவும், ஆனால், குறிப்பிட்டபடி வேலை வாங்கித்தரவில்லை என்றும் முருகேசன் தரப்பில் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக மதுரை 6-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முருகேசன் தாக்கல் செய்த மனு அடிப்படையில் நீதிமன்ற உத்தரவின்படி நாகமலைப்புதுகோட்டை போலீஸôர் ஜெயக்கொடி மீது வழக்குப்பதிந்து விசாரித்துவருவதாகத் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT