முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து பொருள்கள் சூறை: உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு

விருதுநகர் அருகே வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து உள்ளே பொருள்களை தெருவில் தூக்கியெறிந்து சூறையாடியதாக உரிமையாளர் உள்பட 5 பேர் மீது போலீஸார்

Updated On : 5 டிசம்பர், 2014 at 8:39 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 1:05 PM

விருதுநகர் அருகே வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து உள்ளே பொருள்களை தெருவில் தூக்கியெறிந்து சூறையாடியதாக உரிமையாளர் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

     பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டியன்(40). இப்பகுதியைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் வீட்டில் ஒத்திக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில் வீட்டை உடனே காலிசெய்து தரும் படி தகராறு செய்தாராம். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.  ஏற்கனவே இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

]    இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மதியழகன் அவரது மனைவி பாலா உள்ளிட்ட உறவினர் 5 பேர் வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து தகாத வார்த்தைகள் பேசியதோடு, அங்கிருந்த பொருள்கள் அனைத்தையும் வெளியே தெருவில் வீசியெறிந்து சூறையாடினார்களாம். இது தொடர்பாக பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் தங்கப்பாண்டியன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மதியழகன் அவரது மனைவி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.