முகப்பு
தமிழ்நாடு

செல்வப்பெருந்தகை சிறைபிடிப்பு! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

செல்வப்பெருந்தகை சிறைபிடிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்...

Updated On : 20 ஏப்ரல் 2026, 11:38 am IST
செல்வப்பெருந்தகை, முதல்வர் ஸ்டாலின் - Photo: X / Selvaperunthagai
பகிர்:

வருமான வரித்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக தன்னை சிறைபிடித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கும் நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறவுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு இன்று வந்துள்ளார்.

இந்த நிலையில், சோதனை என்ற பெயரில் ஹிந்தி பேசக் கூடிய அதிகாரிகள் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தன்னை சிறைபிடித்து வைத்து பிரசாரம் செய்வதை முடக்கியிருப்பதாக செல்வப்பெருந்தகை பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை பரப்புரையை முடக்க நினைக்கும் சதிக்குக் கடும் கண்டனம்!

இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 48 மணிநேரம் கூட இல்லாத நிலையில், எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் மத்திய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்குத் தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

Selvaperunthagai Arrested! Chief Minister Stalin Condemns!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments