தீக்குளித்து மூதாட்டி தற்கொலை
பழனி பாண்டியன் நகர் தாமரை வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி சிவபாக்கியம்(70). இவர் தனது மகன் முருகேசன்(54) குடும்பத்தாருடன் சேர்ந்து வசித்து வருகிறார். சிவபாக்கியம் வயது முதிர்ந்த
பழனியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
பழனி பாண்டியன் நகர் தாமரை வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி சிவபாக்கியம்(70). இவர் தனது மகன் முருகேசன்(54) குடும்பத்தாருடன் சேர்ந்து வசித்து வருகிறார். சிவபாக்கியம் வயது முதிர்ந்த நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். பல்வேறு இடங்களில் சிகிச்சை பார்த்தும் பயனில்லாத நிலையில் மனம் வெறுத்து இருந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து வீட்டுக்கு வெளியே வந்து உடலில் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை காப்பாற்றி பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை வழங்கியும் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.