முகப்பு
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் 7 ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து சாவு

தூத்துக்குடி அருகேயுள்ள அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகள் அன்னப்பழம் (12). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாள்களா

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:37 AM
பகிர்:

தூத்துக்குடியில் பள்ளி அருகே 7 ஆம் வகுப்பு மாணவி திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி அருகேயுள்ள அந்தோணியார்புரம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகள் அன்னப்பழம் (12). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாள்களா வயிற்றுவலி காரணமாக அன்னப்பழம் பள்ளிக்குச் செல்லாமல் இருந்தாராம்.இந்நிலையில், பெற்றோர் வலியுறுத்தியதால் அன்னப்பழம் திங்கள்கிழமை பள்ளிக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். பகல் 11 மணியளவில் பள்ளியில் இருந்து சென்றவர்கள் அன்னப்பழம் பள்ளிக்கு வரவில்லை என அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனராம்.அவர்கள் தேடிபார்த்தபோது பள்ளிக்கு அருகேயுள்ள ஒரு கட்டடத்தின் பின்புறம் அன்னப்பழம் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததுள்ளது.

இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.