தற்போதைய செய்திகள்

ஆம்பூர் அருகே 9 யானைகள் விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம் : பயிர்கள் நாசம்

ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமம் வனத்துறை எல்லையோரம் அமைந்துள்ளது.  அப்பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் வந்து செல்கின்றன.  செவ்வாய்க்கிழமை இரவு

எம். அருண்குமார்

ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை இரவு 9 யானைகள் புகுந்து அட்டகாயம் செய்ததில் பயிர்கள் நாசமாயின.

ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமம் வனத்துறை எல்லையோரம் அமைந்துள்ளது.  அப்பகுதியில் அடிக்கடி வன விலங்குகள் வந்து செல்கின்றன.  செவ்வாய்க்கிழமை இரவு திடீரென சுமார் 9 யானைகள் அக்கிராமத்திற்கு வந்துள்ளது.  அங்கு தேவன் என்பவருடைய விவசாய நிலத்திற்குள் புகுந்துள்ளன.  நிலத்தில் நெல், வாழை ஆகியவை பயிரிடப்பட்டிருந்தன.  சுமார் முக்கால் ஏக்கர் நெல்பயிர் முழுவதுமாக சேதப்படுத்தியுள்ளது.  மேலும் சில வாழை மரங்களையும், ஒரு தென்னை மரத்தையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்த வனத்துறை பணியாளர்கள், கிராம மக்கள் ஒன்று திரண்டு சென்று யானைகளை விரட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.  நீண்ட நேர முயற்சிக்கு பிறகு அவரை அங்கிருந்து காட்டுக்குள் சென்றன.  திரும்ப யானைகள் வந்தால் அவற்றை விரட்ட பொதுமக்கள் இரவு முழுவதும் விழித்திருந்தனர்.

பேர்ணாம்பட்டு சாரங்கல் வனப்பகுதியிலிருந்து அந்த யானைகள் வந்துள்ளதாக வனத்துறை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT