முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலைக்கு ஏ கிரேடு: மார்க்சிஸ்ட் கம்யூ எம்எல்ஏ பாராட்டு

பல்கலைக்கழகங்களின் கல்வி தரத்தை ஆய்வு செய்யும் தேசிய கல்வித் தரமதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு என்ற நாக் கமிட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை ஏ கிரேடு பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தி

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு ஏ கிரேடு அந்தஸ்டு கிடைத்துள்ளது பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது என சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல்கலைக்கழகங்களின் கல்வி தரத்தை ஆய்வு செய்யும் தேசிய கல்வித் தரமதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு என்ற நாக் கமிட்டி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை ஏ கிரேடு பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தி அறிவித்துள்ளது பெருமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது.இதன் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு ஒன்றாக திகழ்வதுடன், கல்வி மற்றும் ஆராய்ச்சி போன்ற

அம்சங்களில் சர்வதேச கவனத்தை ஈர்க்கும் பல்கலைக்கழககமாகவும் மாறியுள்ளது. மேலும் ஏ கிரேடு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதின் மூலம், இப்பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் சர்வதேச அளவில் உயர்கல்விக்கும், சிறப்பான முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் அரிய வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்ற பட்டதாரிகளை பல நிறுவனங்கள் நேர்முகத்தேர்வுக்கு கூட அழைக்க மறுத்த நிலையில், தற்போது இப்பல்கலைக்கழகம் ஏ கிரேடு என தரம் உயர்த்தப்பட்டதன் மூலம் இப்பல்கலைக்கழக மாணவர்கள் சிறப்புத்தகுதி பெற்றுள்ளதுடன் அவர்களது எதிர்காலம் வளமான வாழ்விற்கும் வழிவகுத்துள்ளது. இச்சாதனையை படைத்திட அரும்பாடு பட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், நிர்வாக பொறுப்பில் உள்ள அனைத்து அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பல்கலைக்கழகம் சமீப ஆண்டுகள் வரையில் நிதிமுறைகேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளினால் தரம் தாழ்ந்து நெருக்கடியில் தத்தளித்து கொண்டிருந்தததால், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. எனவே இப்பல்கலைக்கழகத்தை

பாதுகாத்திட்ட தமிழக அரசு சட்டத்தை திருத்தி அரசின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வர கோரிக்கை எழுப்பி வந்துள்ளேன். ஆசிரியர், அலுவலர்க் உள்ளிட்ட பல அமைப்புகளும் போராடின. இக்கோரிக்கையினை ஏற்று பல்கலைக்கழக சட்டத்தை திருத்தி அரசின் முழுக்கட்டுப்பாட்டின் கொண்டு வந்த தமிழகஅரசுக்கும், தமிழக முன்னாள் முதல்வருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.