முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனி அருகே வையாபுரி குளத்தில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. முன்பு புண்ணிய தீர்த்தமாக வழிபட்ட இக்குளம் தற்போது சாக்கடைகள் சங்கமத்தால் விவசாய பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுகிறது.  இக்குளம் நிரம்பும்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:40 AM
பகிர்:

பழனி வையாபுரி குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்டது.

பழனி நகரின் மையத்தில் உள்ளது வையாபுரி குளம். சமீபத்தில் பெய்த மழையால் தற்போது இக்குளம் நிரம்பி கடல் போல காட்சியளிக்கிறது. முன்பு புண்ணிய தீர்த்தமாக வழிபட்ட இக்குளம் தற்போது சாக்கடைகள் சங்கமத்தால் விவசாய பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுகிறது.  இக்குளம் நிரம்பும் வேளையில் அடிக்கடி அடையாளம் தெரியாத சடலங்கள் மீட்கப்படுவது வழக்கம். கடந்த வாரம் ஒரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் வையாபுரி குளத்தின் வடக்குப் பகுதியில் மீட்கப்பட்டது.  இந்த குளத்தில் விழுபவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனரா, தவறி விழுகின்றனரா அல்லது தள்ளி விட்டு கொலை செய்யப்படுகின்றனரா என்பது தெரிவதில்லை. ஆகவே, குளத்தை சுற்றிலும் உயரமான வேலி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.