தேசிய பிரச்னைகளுக்காக தமாகா போராடும்: ஞானதேசிகன்
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரதமர் மோடி தமிழ்நாட்டில் மீனவர் நலன், இலங்கைத் தமிழர் நலன் காப்பேன் என தெரிவித்து வாக்கு சேகரித்தார். ஆனால் அதை செய்ய தவறி விட்டார். காங்கிரஸ்
தேசிய பிரச்னைகளுக்காகவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போராடும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஞானதேசிகன் தெரிவித்தார்.
பழனி தாலுகா அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கும் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்பி.,யும், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபருமான ஞானதேசிகன் வந்திருந்தார். அவர் தெரிவித்ததாவது:-
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பிரதமர் மோடி தமிழ்நாட்டில் மீனவர் நலன், இலங்கைத் தமிழர் நலன் காப்பேன் என தெரிவித்து வாக்கு சேகரித்தார். ஆனால் அதை செய்ய தவறி விட்டார். காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி விளங்கும். இதுவரை சுமார் 25 இலட்சம் பேர் உறுப்பினராகி உள்ளனர். வரும் ஜனவரிக்குள் இதை ஐம்பது இலட்சமாக மாற்ற நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். திண்டுக்கல் எனது சொந்த மாவட்டம் என்பதால் இந்த மாவட்டத்தில் கிராமம் தோறும் என்று தமிழ் மாநில கட்சியின் கொள்கைகளை கூறி புதிய உறுப்பினர்களை சேர்க்க உள்ளோம். தமாகா மாநில பிரச்னைகளுக்காக மட்டும் பாடுபடாது. தேசிய அளவிலான பிரச்னைகளுக்காகவும், தேசிய அளவில் மாநிலத்தின் உரிமைகளுக்காகவும் பாடுபடும். வரும் 2016 சட்டமன்ற தேர்தலுக்குள் தமாகா பெரிய கட்சியாக உருவெடுக்கும். மின்கட்டண உயர்வுக்காகவும் தமாகா தொடர்ந்து போராடும் என்றார்.