தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

விருதுநகர் தொடர் மணல் கொள்ளையி்ல் ஈடுபட்ட வந்த ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் தொடர் மணல் கொள்ளையி்ல் ஈடுபட்ட வந்த ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே நடுப்பட்டி இந்திராகாலனியைச் சேர்ந்த கருப்பசாமியின் மகன் போத்திராஜ்(37). இவர் எந்த அனுமதியில்லாமல் வைப்பாறு, அர்ஜூனா ஆற்றுப் படுகையில் எவ்விதமான அனுமதியின்றியும் திருட்டு தனமாக மணலை கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மணல் கொள்ளையில் ஈடுபட்டதற்காக சிவகாசி கோட்டாட்சியர் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 9-ம் தேதி வச்சக்காரப்பட்டி அர்ஜூனா ஆற்றுப்படுகையில் தனது டிப்பர் லாரி மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். அதை வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸார் கைது செய்து, மணல் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு சட்ட ஒழுங்கு சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாலும், விருதுநகர், சாத்தூர் ஆற்றுப்படுகையில் இயற்கை கனிம வளங்களையும் பாதுகாக்கும் வகையில் போத்திராஜ் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் ஆய்வு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் போலீஸார் கைது செய்து மதுரை சிறைச்சாலையில் அடைத்தனர்.        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

கஃபுள் பிரண்ட்லி அசத்தல் வசூல்!

எதிர்நீச்சல் -2 தொடரிலிருந்து விலகியது ஏன்? நடிகை கனிகா விளக்கம்

திருமண கொண்டாட்டத்தில் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT