முகப்பு
தற்போதைய செய்திகள்

வீராணம் ஏரி, கீழணை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்ட மத்திய அரசு அணை பாதுகாப்புக் குழுவினர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, கீழணை ஆகியவற்றை மத்தியஅரசு அணை பாதுகாப்பு்குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:41 AM
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, கீழணை ஆகியவற்றை மத்தியஅரசு அணை பாதுகாப்பு்குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் பகுதியில் உள்ள வடவாறு, வடக்குராஜன் வாய்க்கால், வீராணம்ஏரி ஆகியவற்றில் மழைக்காலங்களில் வெளியேறும் நீரின் அளவை கண்டறியும், வீராணம் ஏரியில் அணைக்கட்டு கட்டுவதற்கும் புதிய திட்டத்தை தமிழகஅரசு மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இதனை ஆய்வு மேற்கொள்ள மத்தியஅரசின் அணை பாதுகாப்புக்குழுத் தலைவர் மிடாய் தலைமையில் உறுப்பினர்கள் புர்பா, சுப்புராவ், மண்டே ஆகியோர் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் வருகை தந்தனர். பின்னர் இக்குழுவினர் புதன்கிழமை வீராணம்ஏரி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, கீழணை உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

வீராணம்ஏரியின் உள்ள நீர் கொள்ளளவு, இருப்பு விபரங்கள், மழைக்காலங்களில் வெளியேற்றப்படும் உபரிநீர் விபரங்கள் குறித்து பொதுப்பணித்துறையினரிடம் கேட்டறிந்தனர்.

ஆய்வின் போது கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் பாலசுப்பிரமணியன், குணசேகரன், உதவிப் பொறியாளர்கள் முத்துக்குமார், உமா ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.