சகோதரிகள் தற்கொலை எதிரொலி : அரவிந்தர் ஆசிரமத்தில் முற்றுகைப் போராட்டம்
அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர் கடலில் குதித்ததில் 3 பெண்கள் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆசிரமத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகின்றனர்.

ஆசிரமத்தின் மீது கல்வீச்சு சம்பவங்களும் நடந்துள்ளன.
அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதால் மனம் உடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கடலில் குதித்ததில் 2 பெண்கள் மற்றும் அவரது தாய் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தந்தை உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தற்கொலை சம்பவத்தைக் கண்டித்தும், ஆசிரமத்துக்கு சீல்வைக்க கோரியும் சுமார் 50 க்கும் மேற்பட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகைப் போராட்டம் நடத்துகின்றனர்.