முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் காவல் கோட்டம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மூவர் உள்ளிட்ட 9 போலீஸார் வேலூர் கோட்டத்திற்கு திடீர் இடமாற்றம்

சிதம்பரம் நகர காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை, மதிவாணன், தாலுக்கா காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ்,சிதம்பரம் நகர தலைமைக்காவலர் பிரபாகரன்

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:42 AM
பகிர்:

சிதம்பரம் காவல் கோட்டத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 9 பேர் வேலூர் காவல் கோட்டத்திற்கு திடீர் இடமாற்றம் செய்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

சிதம்பரம் நகர காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை, மதிவாணன், தாலுக்கா காவல் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ்,சிதம்பரம் நகர தலைமைக்காவலர் பிரபாகரன், தாலுக்கா காவல் நிலைய தலைமைக்காவலர் சவுந்தரராஜன், சிதம்பரம் போக்குவரத்து பிரிவுதலைமைக்காவலர் செந்தில்குமார், புவனகிரி காவல் நிலைய தலைமைக்காவலர் வேல்முருகன், சிதம்பரம் முதல்வரின் தனிப்பிரிவு தலைமைக்காவலர் தமிழ்ச்செல்வன், விருத்தாசலம் கலால் காவல் நிலைய தலைமைக்காவலர் விவேகானந்தன் உள்ளிட்ட 9 பேர் வேலூர் காவல் கோட்டத்திற்கு திடீர்இடமாற்றம் செய்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ஏ.ராதிகா உத்தரவிட்டுள்ளார். சிதம்பரம் கோட்டத்தில் மேற்கண்ட போலீஸார் சாதி ரீதியாக செயல்பட்டதாக வந்த புகாரை அடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.