சிதம்பரம் தொழில்நுட்பக்கல்லூரியில் போலி ரசீது கொடுத்து ரூ.2 லட்சம் கையாடல்: இளநிலை உதவியாளர் மீது வழக்குப் பதிவு
சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரியில் மாணவர்களிடம் போலி ரசீகு கொடுத்து கல்வி கட்டணம் 2 லட்சத்து 977 ரூபாய் கையாடல் செய்த இளநிலை உதவியாளர் மீது அண்ணாமலைநகர்
சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரியில் மாணவர்களிடம் போலி ரசீகு கொடுத்து கல்வி கட்டணம் 2 லட்சத்து 977 ரூபாய் கையாடல் செய்த இளநிலை உதவியாளர் மீது அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் தேங்காய்திட்டு வட்டுகப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஏ.ஹெரிக்ஜெகந்நாதன். இவர் சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரியில் இளநிலை உதவியாளராக பணியாற்றுகிறார். இவர் கடந்த 10-2-2014 முதல் 24-7-2014 வரை மாணவர்கள் கட்டிய கல்வி கட்டணத்திற்கு போலி ரசீது கொடுத்து ரூ.2 லட்சத்து 977 ரூபாய் கையாடல் செய்துள்ளார். இதுகுறித்து கல்லூரி முதல்வர் குப்பன் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் இளநிலை உதவியாளர் ஹெரிக்ஜெகந்நாதன் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.