முகப்பு
தற்போதைய செய்திகள்

புதுச்சேரி கடற்கரையில் 3 பெண்கள் தற்கொலை : தற்கொலைக்கு முயன்ற மேலும் நால்வர் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர் புதுச்சேரி கடலில் குதித்தனர். இதில் இரண்டு பெண்கள் மற்றும் அவரது தாய் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தந்தை உட்பட 3 பெண்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:41 AM
பகிர்:

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட குடும்பத்தினர் புதுச்சேரி கடலில் குதித்தனர். இதில் இரண்டு பெண்கள் மற்றும் அவரது தாய் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். தந்தை உட்பட 3 பெண்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாய் - தந்தை மற்றும் அவர்களது 5 மகள்கள் என 7 பேர் அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்தனர். இந்த நிலையில், நேற்று காவல்துறையினர் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இதனால் மனமுடைந்த அவர்கள் 7 பேரும் புதுச்சேரி கடலில் குதித்தனர். இதில் தாய் மற்றும் 2 மகள்கள் உயிரிழந்து அவர்களது உடல்கள் கரை ஒதுங்கியது. தற்கொலைக்கு முயன்ற தந்தை உட்பட 3 மகள்கள் பொதுமக்களால் காப்பாற்றப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.