தற்போதைய செய்திகள்

வீடுகளில் கொசுப்புழு கண்டறியப்பட்டால் அபராதம்: மதுரை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

வீடுகளில் தேங்கிய நீரில் கொசுப்புழு இருப்பது தொடர் ஆய்வில் கண்டறியப்பட்டால் சட்டரீதியாக அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி

ஜெயப்பாண்டி

வீடுகளில் தேங்கிய நீரில் கொசுப்புழு இருப்பது தொடர் ஆய்வில் கண்டறியப்பட்டால் சட்டரீதியாக அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் எச்சரித்துள்ளார்.

 இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மதுரை மாநகராட்சியில் கொசுவால் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

 நோய் தடுப்பு நடவடிக்கைக்கு தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் வீடு, அலுவலகம், வணிகவளாகம், பள்ளி, நிறுவனம், புதிய கட்டடம், கடை மற்றும் உணவகங்கள் ஆகிய இடங்களில் ஆய்வு செய்யும் போது மக்கள் ஒத்துழைக்கவேண்டும்.

 ஆய்வின் போது அனைத்து இடங்களிலும் கொசுப்புழு கண்டறியப்பட்டால் முதலில் நோட்டீஸ் வழங்கப்படும். மேலும் அடுத்தடுத்த ஆய்வில் கொசுப் புழு கண்டறியப்பட்டால், பொது சுகாதாரச் சட்ட விதிகளின் படி அபராதம் விதிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை தொடரப்படும்.

 ஆகவே பொதுமக்கள் வீடுகளில் தண்ணீரைச் சேமிக்கும் போது சேமிப்பு இடத்தை சுத்தமாக பிளீச்சிங் பவுடர் மூலம் கழுவி சேமிக்கவேண்டும். கொசு புகாதவாறு தண்ணீர் உள்ள இடத்தை மூடிவைக்கவேண்டும்.

 வீடுகளில் உள்ள குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் உள்ள தண்ணீரை அடிக்கடி அப்புறப்படுத்தவேண்டும். ஆட்டு உரல், கீழ்நிலைத் தொட்டி, மேல்நிலைத் தொட்டி, பழைய பிளாஷ்குகள், பாத்திரங்கள், டயர்கள், தண்ணீர் தேங்கும் பொருள்களை அப்புறப்படுத்தி, அவற்றை சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.

 காலி மனைகள் வைத்திருப்போர் அதில் தண்ணீர் தேங்காமலும், தேங்கியிருப்பிóன் கொசுப்புழு உற்பத்தியாகாமலும் பாதுகாப்பது அவசியம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மழைநீர் வாய்க்கால் பராமரிப்பு: மதுரையில் 11 மழைநீர் வாய்க்கால்களில் வில்லாபுரம், கோசாகுளம், பீ.பீ.குளம் ஆகியவற்றின் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிந்துள்ளது. அவை சுத்தம் செய்யப்பட்டுவருகின்றன. வரும் ஆண்டில் (2015) மார்ச்சுக்குள் வாய்க்கால்கள் சீர்மைப்பு பணிகள் முடியும் என மாநகராட்சி செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, ஆணையர் சி.கதிரவன் ஆகியோர் புதன்கிழமை பார்வையிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT