அம்பை அருகே மண்ணெண்ணை வாங்க சென்ற முதியவர் சாவு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வெள்ளிக்கிழமை ரேசன் கடைக்கு மண்ணெண்ணை வாங்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வெள்ளிக்கிழமை ரேசன் கடைக்கு மண்ணெண்ணை வாங்க சென்ற முதியவர் மயங்கி விழுந்து இறந்தார்.
அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வெள்ளங்குளி தொண்டைமான் தெருவை சேர்ந்தவர் சுடலைகண்ணு மகன் வண்ணமுத்து (75). இவர் அங்குள்ள ரேசன் கடைக்கு மண்ணெண்ணை வாங்க சென்றாராம். ரேசன்கடையில் கூட்டம் அதிகளவில் இருந்ததால் மண்ணெண்ணை பெற வரிசையில் காத்திருந்த வண்ணமுத்து திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு
கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. மருத்துவமனை செல்லும் வழியில் வண்ணமுத்து இறந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வரிசையில் காத்திருந்த வண்ணமுத்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வீரவநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.