தற்போதைய செய்திகள்

ரயில் சலுகைக்கு லஞ்சம்: மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ரயிலில் சலுகை கட்டணம் பெற மருத்துவர்கள் லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டி திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்ச்செல்வன்

ரயிலில் சலுகை கட்டணம் பெற மருத்துவர்கள் லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டி திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுதிறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாநகராட்சி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத்தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்டச்செயலாளர் ஜெயபால், நந்தகோபால், சங்க உறுப்பினர்கள் 30க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர்.

இதில், அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊனத்தின் தன்மை குறித்த சான்றிதழ்களை உடனடியாக வழங்கிட வேண்டியும், ரயிலில் சலுகை கட்டணம் பெற்றிட சான்று வழங்குவதற்கு லஞ்சம் கேட்கும் மருத்துவர் கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், நிறுத்திவைக்கப்பட்ட உதவித்தொகைகளை உடனடியாக வழங்க கோரியும், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற அமலிலுள்ள கடுமையான விதிமுறைகளை தளர்க்கவும், மாத உதவித்தொகையை மாற்றுத்திறனாளிகளின் துறை மூலமாகவே வழங்கிடவும், அரசு வேலைவாய்ப்பில் 3 சத உத்தரவாதம் செய்திடவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

லியம் லிவிங்ஸ்டனை ரூ. 13 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

ஜனநாயகன் படத்திற்காக காத்திருக்கிறேன்: பராசக்தி நடிகை ஸ்ரீலீலா

ஜன நாயகன் புது அப்டேட் : 2-ஆவது பாடல் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்தியா-சீனா இடையிலான ஏற்றுமதி அதிகரிப்பு!

SCROLL FOR NEXT