முகப்பு
தற்போதைய செய்திகள்

அரவிந்தர் ஆசிரமம் மீது தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்

சுற்றுலாவுக்கும், ஆன்மீகத்துக்கும் சிறந்த தலமான அரவிந்தர் ஆசிரமம் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆசிரமத்தை தாக்கியவர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் தாக்கப்பட்டதற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. புதுவை மாநில இந்து முன்னணி தலைவர் ச.வ சனில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சுற்றுலாவுக்கும், ஆன்மீகத்துக்கும் சிறந்த தலமான அரவிந்தர் ஆசிரமம் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆசிரமத்தை தாக்கியவர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் மெத்தன போக்கினால் தான் ஆசிரமத்திற்கு இழப்பும், அவதூறும் ஏற்பட்டு விட்டது. ஆசிரம விவகாரத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்தியிருந்தால் அசம்பாவிதங்களை தடுத்திருக்க முடியும். ஆசிரம சகோதரிகளின் துயர சம்பவத்தை பயன்படுத்தி புதுச்சேரியில் அமைதியின்மையை ஏற்படுத்த சில சக்திகள் முயல்வதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆசிரமத்தின் மீது பழி சுமத்தும் நோக்கோடு ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே செயல்படுவது கண்டனத்திற்குரியது. ஆசிரமத்தின் மீது தாக்குதல் ஏற்பட்டுள்ளதால் உலகெங்கிலும் உள்ள அரவிந்தர் ஆசிரம பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். இப்பிரச்னை தொடர்பாக அரசு துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சனில்குமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.