தில்லைக்காளியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்து 765
இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி, நிர்வாக அதிகாரி க.முருகன், ஆய்வாளர் ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோயில் அலுவலர்கள்
பிரசித்தி பெற்ற சிதம்பரம் ஸ்ரீ அருள்மிகு தில்லைக்காளியம்மன் கோயிலில் புதன்கிழமை உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 765 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது.
இந்து அறநிலையத்துறை உதவிஆணையர் சி.ஜோதி, நிர்வாக அதிகாரி க.முருகன், ஆய்வாளர் ஜி.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. கோயில் அலுவலர்கள் வாசு, வெங்கடேசன், ராஜ்குமார் மற்றும் கடலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் 7 லட்சத்து 55 ஆயிரத்து 765 ரூபாய் கிடைத்தது. மேலும் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய தங்கம் 72 கிராம், வெள்ளி 160 கிராம் ஆகியவை இருந்தது.