முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் விட்ட வழக்கில் 6 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் 6 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து அவர்களிடம் இருந்த கள்ள ரூபாய் நோட்டுகள் ரூ.19900-

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கள்ள ரூபாய் நோட்டு புழக்கத்தில் விட்ட வழக்கில் 6 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் 6 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து அவர்களிடம் இருந்த கள்ள ரூபாய் நோட்டுகள் ரூ.19900-

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:46 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் 6 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்து அவர்களிடம் இருந்த கள்ள ரூபாய் நோட்டுகள் ரூ.19900-யை பறிமுதல் செய்தனர். மேலும் ஒரு மோட்டார் சைக்கிள், கள்ள நோட்டுகள் தயாரிக்கப் பயன்படுத்திய லேப்டாப், பிரிண்டர், ஸ்கேனர் உள்ளிட்டவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், சித்துராஜபுரம், கந்தசாமி மகன் வள்ளிக்குமார் (35). இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். சில தகவல்களின் பேரில் இவரை போலீஸார் கவனித்து வந்தனர். இந்நிலையில் இவரும் இதே இடம் சசிநகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் பிரபாகரன் (37) என்பவரும் இரு சக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வருவதாய் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் குற்றத்தடுப்பு தொடர்பாக காவல் சார்பு ஆய்வாளர் ஸ்ரீதாமரைவிஷ்ணு தலைமையில் போலீஸார் வெள்ளிக்கிழமை  ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். மேலும் சந்தேகத்தின் பேரில் அவர்களை போலீஸார் நகர் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். வள்ளிக்குமாரிடம் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 50-ம், 50 ரூபாய் கள்ள நோட்டுகள் 68-ம் இருந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ.8400. பிரபாகரனிடம் 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 50 இருந்துள்ளது. பணத்தை பறிமுதல் செய்து அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தையும் போலீஸார் கைப்பற்றினர்.

இவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள பந்தப்புளி என்ற ஊரின் அருகேயுள்ள முனியசாமி என்பவரின் பம்புசெட் தோட்டத்திற்கு சென்று சோதனையிட்டனர். அங்கு இவர்கள் கள்ள ரூபாய் நோட்டு அச்சிடப்பயன்படுத்திய ஸ்கேனர், லேப்டாப், வேதிப்பொருள் பொடி, கள்ள 100 ரூபாய் நோட்டில் முன்பக்கம் அச்சிடப்பட்டும், பின்பக்கம் அச்சிடப்படாமலும் உள்ள நோட்டுகள், மேலும் ரூபாய் நோட்டு அச்சிடப் பயன்படுத்தும் தாள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் பிடிபட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ராஜபாளையம்-சுந்தரராஜபுரம் ரா.ஜான் (எ) ராஜேந்திரண் (45), ஸ்ரீவில்லிபுத்தூர்-பூவாணி ரா.முருகன் (39) ஆகியோரிடம் இருந்த தலா 17 கள்ள 100 ரூபாய் நோட்டுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.சங்கரன்கோவில்-பந்தப்புளி கு.முனியசாமி (44), நெல்லை மாவட்டம் வாழவந்தாள்புரம் ரா.முத்துராஜ் (58) ஆகியோரிடம் இருந்த தலா 10 கள்ள 100 ரூபாய் நோட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 6 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து மொத்தமாக ரூ.19900 கள்ள ரூபாய் நோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதி்மன்றம் எண் 2-ல் முன்னிலைப் படுத்தப்பட்டனர். இவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி கவிதா உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →