தற்போதைய செய்திகள்

செங்கல்பட்டு அருகே மாந்திரீகம் செய்வதாக கூறி ஏமாற்றியவர்கள் கைது

தினமணி

செங்கல்பட்டை அடுத்த புதுப்பாக்கம் பகுதியில் மாந்திரீகம் மூலம் பிரச்சனைகளை தீர்த்து வைத்தாக கூறி ஏமாற்றிய இரண்டு பேரை பொதுமக்கள் வளைத்து பிடித்து கட்டிவைத்து தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டை அடுத்த புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (28), திருமணமாகாதவர். கம்ப்யூட்டரி டிசைனர். தொழிலில் தொடர்ந்து  நஷ்டம் அடைந்ததை இவர் இணையதளத்தில் மாந்திரீக  பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக கூறி வந்த விளம்பரத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

இதனையடுத்து  ராதாகிருஷ்ணன், இணையதளத்தில் மாந்திரீகம் மூலம் பிரச்னையை  தீர்ப்பது குறித்த விளம்பரத்தைப்  பார்த்து தொடர்பு கொண்டபோது  சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த  கோடம்பாக்கம் காதர்பாஷா (33), சவுகத்அலி (38)ஆகியோர்  மாந்திரீகம் மூலம் பிரச்னையை தீர்த்து வைப்பதாக கூறி ரூ 20 ஆயிரம் கேட்டுள்ளனர். ராதாகிருஷ்ணன் ரூ.20 கொடுத்துள்ளார். பணத்தையும் பெற்றுக் கொண்ட காதர்பாஷா, சவுகத்அலி  மாநிதிரீகம்  செய்வதற்காக இருவரும் புதுபாக்கத்தில் உள்ள ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தனர்.  மேலும் பூஜை செய்வதற்கு சிறுமி அல்லது கன்னிப்பெண் வேண்டும் என்றனர். அப்போது தான் மாந்திரீகம் பலிக்கும் என்றுள்ளனர். அதற்கு மறுப்புத்தெரிவித்துள்ளார் ராதாகிருஷ்ணன். மறுப்புதெரிவித்ததையடுத்து யாரும் இல்லை என்பதால அவரையே நிர்வாண நிலையில் பூஜைக்கு வரவேண்டும் என்றதாலும் டவல்மட்டும் கட்டிக்கொண்டுவரும்படியும் கூறியதையடுத்து  பயந்துபோன் ராதாகிருஷ்ணன் டவல்கட்டிவருவதாக அறைக்குச்சென்றவர் வீட்டில் இருந்த மிளகாய்பொடியை கொண்டுவந்து அவர்களது கண்ணில் தீவிவிட்டு வீட்டைவிட்டு வெளியே வந்து கூச்சல் போடவும், கூச்சல் சப்தத்தை கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் இருவரையும் வளைத்து பிடித்து கடடிப் போட்டு தர்மஅடி கொடுத்தனர்.

பின்பு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று இருவரையும் பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டத்தில் நடத்தது உண்மை எனத்தெரியவந்ததையுட்டு இருவரையும் கைதுசெய்து செங்கல்பட்டு நீதிமன்றதில் ஆஜர்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT