முகப்பு
தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றவர் தனியார் பேருந்து மோதி சாவு

விருதுநகர் மாவட்டம், கள்ளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (56). இவர், தனது நண்பர் நல்லையன் உள்ளிட்ட 15 பேருடன் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:48 AM
பகிர்:

தூத்துக்குடி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் திருச்செந்தூர் கோயிலுக்கு பாதயாத்திரை சென்றவர் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம், கள்ளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (56). இவர், தனது நண்பர் நல்லையன் உள்ளிட்ட 15 பேருடன் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக திங்கள்கிழமை இரவு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.தூத்துக்குடி அருகேயுள்ள குறுக்குசாலை பகுதியில் அவர்கள் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது செவ்வாய்க்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து திசையன்விளை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து திடீரென சுப்புராஜ் மற்றும் நலலையன் ஆகியோர் மீது மோதியது. இதில் சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். காயமடைந்த நல்லையன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஒட்டப்பிடாரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.