மேல்மருவத்தூரில் பயங்கரம் : வாகனம் மோதி 4 பக்தர்கள் பலி ; 5 பேர் காயம்
மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் கோயிலுக்கு இருமுடி செலுத்த வந்த பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூர் கோயிலுக்கு இருமுடி செலுத்த வந்த பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், 3 பெண்கள் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ஸ்ரீபெரும்பதுர் வட்டம் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோயிலுக்கு இருமுடி செலுத்த வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் சிக்கியதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.