ஸ்ரீவிலி.யில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர், திருவண்ணாமலை-மாதாநகரைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி பழனியம்மாள் (42). இவர் சனிக்கிழமை காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச் சென்றுள்ளார். மாலை வேலை முடிந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைந்து தொங்கிக் கொண்டிருந்துள்ளது. உள்ளே சென்று பார்த்த போது அரிசி டப்பாவில் வைத்திருந்த சாவியை எடுத்து, பீரோவைத் திறந்து அதிலிருந்து 3 பவுன் எடையுள்ள செயின், தோடு மற்றும் மோதிரத்தை யாரோ திருடிச் சென்றுள்ளது தெரிய வந்தது. இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பழனியம்மாள் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.