மதுராந்தகம் அருகே ஆம்பூலன்ஸ் மோதிய விபத்துகளில் 2 பேர் பலி, 2 குழந்தைகள் உள்பட 3பேர் படுகாயம்
மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமியின் மகன் சேகர்(47). இவர் மதுராந்தகம் வந்துவிட்டு, தனது ஊரான மொறப்பாக்கம் செல்ல அய்யனார் கோயில் அருகே தேசிய
மதுராந்தகம் அருகே இன்று 2 மோட்டார் சைக்கிளில் சென்றவர்களின் மீது ஆம்பூலன்ஸ் மோதி மோதிய விபத்தில் 2பேர் உயிரிழந்தனர், 3பேர்கள் படுகாயம் அடைந்தனர்.
மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமியின் மகன் சேகர்(47). இவர் மதுராந்தகம் வந்துவிட்டு, தனது ஊரான மொறப்பாக்கம் செல்ல அய்யனார் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த தனியார் ஆம்பூலன்ஸ் வேன் வேகமாக, சுரேஷ் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. அதில் அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.
இந்நிலையில், ஆம்பூலன்ஸ் வேனின் டிரைவர் நிலை தடுமாறி, மொறப்பாக்கத்தில் இருந்து மதுராந்தகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த கமலகண்ணனின் மகன் டெய்லர் சுரேஷ் (35) மற்றும் அவரது மகள்களான சத்தியபிரியா(5), கோபிகா(4) ஆகியோர்களின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேர்களை உடனடியாக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், சுரேஷ் உயிரிழந்தார். மேலும் மதுராந்தகத்தில் பஸ்க்காக காத்திருந்த ஊத்துக்காடு கோபால்(40) என்பவரின் மீதும் அந்த வாகனம் மோதியது. இதில் கோபால் படுகாயம் அடைந்தார்.
Advertisement
இநத் தொடர் விபத்துகளில், படுகாயம் அடைந்த சேகர், சத்தியபிரியா, கோபிகா ஆகியோர் உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து தகவல் அறிந்த, மதுராந்தகம் டி.எஸ்.பி ராஜேந்திரன், மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சொக்கலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் சென்று விசாரணை செய்தனர். தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சரி செயதனர். விபத்தை ஏற்படுத்திய ஆம்பூலன்ஸ் டிரைவர் தப்பி ஓடி விட்டார். அது குறித்து மதுராந்தகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.