முகப்பு
தற்போதைய செய்திகள்

 ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க 30 கோடி பேரம்பேசினார்கள்: ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் குற்றச்சாட்டு

தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க தங்களிடம் பாஜகவினர் 30 கோடி வரை தருவதாக கூறினர் என்று

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:18 AM
பகிர்:

தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க தங்களிடம் பாஜகவினர் 30 கோடி வரை தருவதாக கூறினர் என்று அக்கட்சி எம்எல்ஏக்கள் மதன்லால் மற்றும் சஞ்சய்தத் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியது: நரேந்திர மோடியோ, ஜேட்லிக்கு நெருக்கமானவர்கள் எனறு கூறிக்கொண்ட சிலர் எங்களிடம் போனில் பேசினர், அதை நாங்கள் பதிவு செய்யவில்லை எனினும் இதுமுழுக்க முழுக்க உண்மையானது. நாங்கள் இதற்கு பதில் எதுவும் அளிக்கவில்லை. 9 எம்.எல்.ஏ.,க்களுடன் வந்தால், எங்களில் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி தருவதாகவும் அவர்கள் கூறினர்.

 எங்கள் ஆட்சியை ஒழிக்க காங்கிரஸ், பா.ஜ., கட்சிகள் கடும் முயற்சி செய்து வருகின்றன.  நாங்கள் அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையை எதிர்க்கிறோம் என்பதால் அமெரிக்க அதிபர் ஒபாமா, ரஷ்ய பிரதமர் புடின் ஆகியோர் எங்களின் அரசை அகற்ற விரும்புகின்றனர்.

  ஏனெனில் அன்னிய நேரடி முதலீடு தடையால் அவர்களுக்கு வால்மார்ட்டின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் இந்த முயற்சி இருக்கலாம். இந்த விஷயத்தை நாங்கள் மக்களிடம் எடுத்து செல்வோம். அம்பானி மற்றும் அதானி ஆகியோர் மூலம் இந்த முயற்சி நடந்திருக்கலாம் என்றும், சந்தேகிக்கின்றோம். மேலும் எங்கள் கட்சியின் வளர்ச்சி பிற கட்சிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றனர்

அருண்ஜெட்லி மறுப்பு

இந்த விவகாரம் குறித்து மறுப்பு தெரிவித்துள்ள பாஜக அருண்ஜெட்லி இவர்களின் குற்றச்சாட்டுகள் தரந்தாழ்ந்தவை, பொய்யானவை என்றார். மேலும் பொய் சொல்வதற்கு தங்களுக்கு உரிமை உள்ளது என்று காட்டுவது உள்ளிட்ட மாற்று முறை அரசியலை அவர்கள் வெளிக்காட்டுகிறார்கள் என்று அருண் ஜேட்லி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.