முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தனியார் பேருந்துகளில் திடீர் கட்டண உயர்வு

கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்துகளின் கட்டணம் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், நடுத்தர

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:18 AM
பகிர்:

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் தனியார் பேருந்துகளில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பேருந்துகளின் கட்டணம் தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பொதுமக்கள், குறிப்பாக ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

தனியார் பேருந்து கட்டண உயர்வை தடுத்து நிறுத்த வலியுறுத்தி கடலூர் தெற்கு மாவட்ட மனித உரிமைகள் கழகம் அரசு ஊழியர் பிரிவு மாவட்டச் செயலாளர் கே.முருகானந்தன் கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். கடிதத்தில் தமிழகஅரசு பேருந்து கட்டணம் தொடர்பாக எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் தனியார் பேருந்துகள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்தியுள்ளது கண்டனத்திற்கு உரியது. அரசு பேருந்துகளில் எவ்வித கட்டண உயர்வும் இல்லாத நிலையில் தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. எனவே வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் மூலம் தனியார் பேருந்துகளை சோதனை மேற்கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்தி, அந்த பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கே.முருகானந்தம் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.