முகப்பு
தற்போதைய செய்திகள்

மயான விவகாரம் தொடர்பில் முஸ்லிம்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில், அந்தப் பகுதி ஜமாத்துக்குச் சொந்தமான முஸ்லிம்களின் மயான இடத்தை, 2008ல் தங்க நாற்கர சாலைத் திட்ட விரிவாக்கத்துக்கு அளித்திருந்தனர். அப்போது அரசுத் தரப்பில் வேறு இடத்தை வழங்குவ

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:18 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியில், அந்தப் பகுதி ஜமாத்துக்குச் சொந்தமான முஸ்லிம்களின் மயான இடத்தை, 2008ல் தங்க நாற்கர சாலைத் திட்ட விரிவாக்கத்துக்கு அளித்திருந்தனர். அப்போது அரசுத் தரப்பில் வேறு இடத்தை வழங்குவதாகக் கூறியிருந்தனர். அதன்படி அவர்கள் ஒதுக்கிய இடம், கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான மயான பூமி என்பதால், தங்களுக்கு வேறு இடம் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்தப் பிரச்னையில் இன்று தீர்வு காண வலியுறுத்தி, அந்தப் பகுதி முஸ்லிம்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.