முகப்பு
தற்போதைய செய்திகள்

பழனிக்கு 5 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததாலும், மழையின் அளவு மிக குறைவானதாலும் கடும் வறட்சி நிலவி வருகிறது.  இதுகுறித்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

பழனியில் கடும் வறட்சி காரணமாக ஐந்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

     இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததாலும், மழையின் அளவு மிக குறைவானதாலும் கடும் வறட்சி நிலவி வருகிறது.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வறட்சி தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

பழனி நகரின் குடிநீர் ஆதாரமான கோடைகால நீர்த்தேக்கம் மற்றும் பாலாறு அணையில் மிக குறைந்த அளவே தண்ணீர் உள்ளதால் குடிநீர் சேமிக்கும் பொருட்டு அடிவாரம், நகரின் மேற்கு பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படும். மேலும், பழனி நகர மக்கள் குடிநீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு குடிநீரை சிக்கனமாக செலவு செய்யவும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.