மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு
பட்டுக்கோட்டையை அடுத்த கோட்டாக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜி. கோவிந்தராஜ் (55). இவர் புதன்கிழமை பிற்பகல் அதே ஊர் பிரதான சாலையின் குறுக்கே நடந்து சென்றபோது, அந்த வழியாக
பட்டுக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
பட்டுக்கோட்டையை அடுத்த கோட்டாக்குடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜி. கோவிந்தராஜ் (55). இவர் புதன்கிழமை பிற்பகல் அதே ஊர் பிரதான சாலையின் குறுக்கே நடந்து சென்றபோது, அந்த வழியாக கழுமங்குடாவைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜ் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார்.இது குறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலைய போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.