முகப்பு
தற்போதைய செய்திகள்

ராணுவ வீரர் மனைவி பாலியல் பலாத்காரம்: விவசாயி தலைமறைவு

ராணுவ வீரர் மனைவி அளித்த பாலியல் பலாத்கார புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள விவசாயியை போலீஸார் தேடி வருகின்றனர்

Updated On : 15 பிப்ரவரி, 2014 at 7:40 PM
பகிர்:

ராணுவ வீரர் மனைவி அளித்த பாலியல் பலாத்கார புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள விவசாயியை போலீஸார் தேடி வருகின்றனர்.

 கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவ முகாமில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வள்ளி(30) (பெயர்மாற்றப்பட்டுள்ளது), இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அதே ஊரைச்சேர்ந்த துரை (35) என்பவர் கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த வள்ளியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

 இந்நிலையில் கடந்த வாரம் ராமச்சந்திரன் ஊர் திரும்பினார். அவரிடம் நடந்த சம்பவத்தை வள்ளி கூறி உள்ளார். பின்னர் குறிஞ்சிப்பாடி காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள துரையை தேடி வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.