முகப்பு
தற்போதைய செய்திகள்

பணம் பறித்ததாக இரு வடமாநில மாணவர்கள் கைது

சிதம்பரத்தில் மெக்கானிக்கிடம் பணம் பறித்ததாக அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பயிலும் வடமாநிலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

சிதம்பரத்தில் மெக்கானிக்கிடம் பணம் பறித்ததாக அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் பயிலும் வடமாநிலை மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

பீகாரைச் சேர்ந்த பிரியரஞ்சன் பிரியதர்சி (23) சிதம்பரம் கோவிந்தசாமித்தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அண்ணாமலைப் பல்கலையில் 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார். அதேபோன்று பீகாரைச் சேர்ந்த சங்கர் முருமோ (23) டைமண்ட் ஜூப்ளி விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பயின்று வருகிறார்.

இருவரும் தனது மோட்டார் சைக்கிளை அண்ணாமலைநகர் சிவபுரி மெயின்ரோட்டில் உள்ள முரளி என்பவரது மெக்கானிக் ஷாப்பில் பழுதுபார்க்க விட்டனர்.

பின்னர் சரியாக பழுது பார்க்கவில்லை எனக்கூறி மெக்கானிக் முரளியை தாக்கி, அவரது சட்டை பையைலிருந்த ரூ.100 தொகையை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்து இரு மாணவர்களையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.