கோவை மாநகராட்சி பட்ஜெட்: 28.81 கோடி பற்றாக்குறை
கோவை மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2014-15 ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில் 28.81 கோடி ரூபாய் பற்றாகுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2014-15 ஆண்டுக்கான இந்த பட்ஜெட்டில் 28.81 கோடி ரூபாய் பற்றாகுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தில்லூர் 3வது குடிநீர் திட்டத்துக்கு ஆய்வறிக்கை தயார் செய்ய ரூ.1 கோடி ஒதுக்கீடு, கோவையில் பொழுதுபோக்குக்கு தீம் பார்க் விரிவான திட்டட அறிக்கைக்கு 50 லட்சம் ஒதுக்கீடு கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் விரிவான திட்ட அறிக்கைக்கு ரூ 1 கோடியும் புதிய ஆம்னி பேருந்து நிலையம் அமைக்க ரூ 50 லட்சம் ஒதுக்கிட்டு, மின் சிக்கன விளக்குகள் புதுப்பித்தல் திட்டத்தில் 37 ஆயிரம் மின் விளகுகளுக்கு ரூ. 3 கோடி ஒதுக்கீடு சூர்ய ஒளி மூலம் மண்டல அலுவலக வளாகங்களில் தலா 7.50 கிலோவாட் திறன் கொண்ட சோளார் பேனல் அமைக்கவும் மகப்பேறு மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சோளார் பேனல்கள் அமைக்க ரூ.2 ஒதுக்கீடு போக்குவரத்து நெரிசல் மிகுந்த 5 சாலைகளில் நடைபாதைகளை அகலப்படுத்த 3 கோடி ருபாய் ஒதுக்கீடு குறிஞ்சி பகுதியில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி மற்றும் பகிர்மான குழாய்கள் அமைத்து விநியோகம் செய்ய 42.55 கோடியில் இந்த ஆண்டு இறுதிக்குள் திட்டம் தயார் படுத்தப்படும். என கூறப்பட்டுள்ளது.