முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் பன்னிரு தமிழ்வேத வெள்ளிவிழா மாநாடு தொடக்கம்

சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் 25-ம் ஆண்டு பன்னிரு தமிழ்வேத வெள்ளிவிழா மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.இம்மாநாடு 24-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் 25-ம் ஆண்டு பன்னிரு தமிழ்வேத வெள்ளிவிழா மாநாடு சனிக்கிழமை தொடங்கியது.

இம்மாநாடு 24-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

இம்மாநாட்டில் தமிழகம் முழுவதிலிமிருந்து நூற்றுக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்கின்றுள்னர். சனிக்கிழமை அதிகாலை சிவனடியார்கள் பங்கேற்ற சிவபூஜை நடைபெற்றது. விடைக்கொடியை ஜி.எம்.ஸ்ரீதர்வாண்டையார் ஏற்றி வைத்து திருமுறை பேரணியை தொடங்கி வைத்தார்.

Advertisement

பேரணி வாண்டையார் திருமண மண்டபத்திலிருந்து புறப்பட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் தேரோடும் வீதிகளில் வலம் வந்து மாநாட்டு மண்டபத்தை அடைந்தது. இப்பேரணியில் சிவனடியார்கள் திருமுறைகளை தலையில் சுமந்தமாறு ஆடிப்பாடி வீதிஉலா வந்தனர். மாநாட்டிற்கு ரா.உமாபதி தீட்சிதர் தலைமை வகித்தார். ராம.முத்துக்குமரேசன் வரவேற்றார். கமலா அம்பாள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். எஸ்.ராமநாதன், எஸ்.திருநாவுக்கரசுபிள்ளை, சென்னை ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.

தமிழகத்து சிவஞானிகள், அறநெறி கதைகள், சிவராத்திரி மற்றும் பிரதோஷ வழிபாட்டு பாடல்கள் என்ற மூன்று நூல்களை ஸ்ரீவில்லிபுத்தூர் திருப்பதி, பட்டுக்கோட்டை கே.கணேசன், சேலம் பொறியாளர் நடராஜன் ஆகியோர் வெளியிட்டனர். 16 சிவனடியார்களுக்கு சிவப்பெருந்தொண்டர் விருதும், 64 சிவனத்தொண்டர்களுக்கு நாயன்மார்கள் நினைவாக விருதும், ரூ.5 ஆயிரம் நிதியும்,  119 சிவனடியார்களுக்கு சிவனருட் செல்வர்களுக்கு விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். விழாவின் விழுப்பொருள் என்ற தலைப்பில் ஆ.பக்தவத்சலம் சொற்பொழிவாற்றினார்.

2-ம் நாள் மாநாடான ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து எழுத்து பெருவேள்வி நடைபெறுகிறது. மூன்றாம் நாள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு திருமுறை கோடி அர்ச்சனை நடைபெறுகிறது. தினமும் அதிகாலை 5 மணிக்கு சிவனடியார்கள் பங்கேற்கும் சிவபூஜை நடைபெறுகிறது. மாநாட்டு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளார் ஆ.பக்தவச்சலம் தலைமையில் ராம.முத்துக்குமரேசன், சத்தியவாடி வை.திருநாவுக்கரசு ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments