சிதம்பரத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு புகைப்படம் எடுக்கும் முகாம்: பிப்.23-26 வரை ஏற்பாடு
தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீட்டு அட்டை இல்லாத குடும்பங்களுக்கு புகைப்படம் எடுக்கும் சிறப்பு முகாம் சிதம்பரத்தில் பிப்.23,24,25 மற்றும் 26 தேதிகளில் கீழ்க்காணும் முகாம்களில் நடைபெறுகிறது.

இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு இருக்க வேண்டும்.
முகாம்கள் நடைபெறும் இடம்:
திரெளபதி அம்மன் கோயில் தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி, வடக்குவீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி, மாலைக்கட்டித்தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி, ஸ்ரீராமகிருஷ்ணா வித்தியாசாலை மேல்நிலைப்பள்ளி, ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் நகராட்சி அலுவலகம்.
புகைப்படம் எடுக்க வரும்போது குடும்ப அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் பெறப்பட்ட வருமானச்சான்று இவைகளை கொண்டு வர வேண்டும். அனைத்து குடும்பத்தினரும் முகாமில் பங்கேற்று பயனடையுமாறு சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.