திருமுறை ஊர்வலத்திற்கு அதிகமாக கூட்டம் சேர்த்ததாக சிதம்பரம் போலீஸார் வழக்கு
சிதம்பரத்தில் திருமுறை ஏந்தி சென்ற ஊர்வலத்திற்கு நிபந்தனையை மீறி அதிகமாக கூட்டம் சேர்த்ததாக சிதம்பரம் போலீஸார் பேரணி அமைப்பாளர் இருவர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
சிதம்பரத்தில் திருமுறை ஏந்தி சென்ற ஊர்வலத்திற்கு நிபந்தனையை மீறி அதிகமாக கூட்டம் சேர்த்ததாக சிதம்பரம் போலீஸார் பேரணி அமைப்பாளர் இருவர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் திருமண மண்டபத்தில் 25-ம் ஆண்டு பன்னிரு தமிழ்வேத வெள்ளிவிழா மாநாடு மற்றும் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
இம்மாநாட்டில் தமிழகம் முழுவதிலிமிருந்து சிதம்பரம் நகருக்கு ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் வந்துள்ளனர். சனிக்கிழமை காலை சிவனடியார்கள் திருமுறைகளை தலையில் சுமந்து நான்குவீதிகளும் பேரணியாக வலம் வந்தனர்.
இந்நிலையில் போலீஸார் நிபந்தனையை மீறி போக்குவரத்திற்கு இடையூறாக ஊர்வலத்தில் அதிகமாக கூட்டம் கூட்டியதாக பேரணி அமைப்பாளர் கழிஞ்சூர் ராமலிங்கம், சிதம்பரம் ராம.முத்துக்குமரேசன் ஆகிய இருவர் மீது நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.