மகாசிவராத்திரியை முன்னிட்டு சிதம்பரத்தில் 108 ருத்ர கலச ஊர்வலம்!
சிதம்பரம் அருகே உள்ள விபீஷணபுரம் (புலிமடு) சக்திநகரில் உள்ள ஸ்ரீமங்களநாயகி சமேத ஸ்ரீமத்யந்தினீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகாசிவராத்திரி உற்சவம் செவ்வாய்க்கிழமை
மகாசிவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு சிதம்பரத்தில் ஸ்ரீவியாக்ரபாதர் வழிபாட்டுக்குழுவினரின் 108 ருத்ரகலச ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் அருகே உள்ள விபீஷணபுரம் (புலிமடு) சக்திநகரில் உள்ள ஸ்ரீமங்களநாயகி சமேத ஸ்ரீமத்யந்தினீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மகாசிவராத்திரி உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. உற்சவத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள ருத்ர அபிஷேகத்திற்காக சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சித்சபை அருகே உள்ள தீர்த்த கிணறான பரமானந்தகூடத்திலிருந்து ஸ்ரீவியாக்ரபாதர் வழிபாட்டுக்குழுவினர் 108 பேர் 108 கலசங்களில் தீர்த்த நீரை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக புறப்பட்டு விபீஷணபுரம் கோயிலை அடைந்தனர். கோயிலில் செவ்வாய்க்கிழமை தூப தீப வழிபாடும், அன்னதானம் மற்றும் ஆன்மீகச் சொற்பொழிவு நடைபெற்றது.
2-ம் நாள் புதன்கிழமை கஞ்சிவார்த்தல், மாவிளக்கு போடுதல் நிகழ்ச்சியும், 3-ம் நாள் வியாழக்கிழமை மகாசிவராத்திரியன்று ருத்ரயாகம், ருத்ரஅபிஷேகம், தீர்த்தஅபிஷேகம், 1008 தீபம், மகாசிவராத்திரி நான்குகால பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.