நடராஜர் கோயிலில் 33-வது நாட்டியாஞ்சலி நாளை தொடக்கம்!
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடனக் கலைஞர்கள் தங்களது நாட்டியத்தை ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவான 33-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் நடனக் கலைஞர்கள் தங்களது நாட்டியத்தை ஆடல்வல்லான் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவான 33-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா மகாசிவராத்திரியான நாளை (பிப்.27) வியாழக்கிழமை மாலை தொடங்குகிறது. நாட்டியாஞ்சலி விழா தொடர்ந்து மார்ச்.3-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.
நாட்டியாஞ்சலி வியாழக்கிழமை மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. தொடக்கவிழா மாலை 7.45 மணிக்கு நடைபெறுகிறது. எஸ்.எஸ்.சிவக்குமார் தீட்சிதர் தலைமை வகிக்கிறார். பொதுதீட்சிதர்களின் செயலாளர் எம்.காசிராஜ தீட்சிதர் முன்னிலை வகிக்கிறார். நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன் வரவேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்துப் பேசுகிறார்.
விழா ஏற்பாடுகளை நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர் வழக்குரைஞர் ஏ.கே.நடராஜன், துணைத் தலைவர்கள் கே.சுவாமிநாதன், செயலாளர்கள் வழக்குரைஞர் ஏ.சம்பந்தம், ஆர்.நாகசாமி, இணைச் செயலாளர் ஆர்.நடராஜன், பொருளாளர் எஸ்.ஆர்.ராமநாதன், உறுப்பினர்கள் ஆர்.கே.கணபதி, டாக்டர் ஆர்.முத்துகுமரன், வி.பாலதண்டாயுதம், ஆர்.சபாநாயகம் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.
நாட்டியாஞ்சலியில் நாளை....
நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழாவில் வியாழக்கிழமை (பிப்.27) பங்கேற்கும் நடனக் கலைஞர்கள் விபரம் (மாலை 5.30 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 5.00 மணி வரை): ஜே.இந்துமாலினி, அனுஷியா ஹரிராஜன், அண்ணாமலைப் பல்கலைக்கழக கவின் கலைத்துறை மாணவர்கள், யுஎஸ்ஏ பத்மாராணி ராசையா கண்ட்டு, டாக்டர் பத்மாசுப்பிரமணியம். ஊர்மிளா சத்யநாராயணன் மற்றும் அவரது மாணவியர்கள், புதுதில்லி நவ்தேஜ்சிங் ஹோஹர், திருநங்கை நர்த்தரி நடராஜ், ஆகியோரின் பரதம், யு.எஸ்.ஏ நளினி பிரகாஷ் மற்றும் விஜய்பாலபர்த்தி ஆகியோரின் அர்த்தநாரீஸ்வரம் நடனம்,
புதுதில்லி கீதாசந்திரன், பெங்களூர் பத்மாலயா நாட்டியப்பள்ளி மாணவியர்கள், புனே நிருத்ய பிரேரணா மாணவியர்கள், மும்பை ரூபக் மேத்தா, மும்பை நிருத்ய கலாநிகேதன் மாணவியர்கள், மும்பை பிராச்சி சாத்தி, பெங்களூர் த்வனி ராஜேஸ்வரி, சென்னை வழூவூரார் ஆர்ட்ஸ் அகாதெமி டாக்டர் மகாலட்சுமி பக்தவத்சலம், கமலா கற்பகவல்லி, மாளவிகா குமரன், பெங்களூர் ரக்ட்சிதா பிரசாத், சென்னை எஸ்.அர்ச்சனா, சென்னை எம்.செந்தில்குமார், மலேசியா நிருத்ய நடனாஞ்சலி சித்திரை மற்றும் மாணவியர்கள், ஐய்வர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் பரதம்.