முகப்பு
தற்போதைய செய்திகள்

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாள் பயிற்சி

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான முதற்கட்ட மூன்று நாள் பயிற்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான முதற்கட்ட மூன்று நாள் பயிற்சி வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

நரையன்குளம்-ஒத்தப்பட்டி குறுவளமையத்தில் நடைபெற்ற பயிற்சியை வியாழக்கிழமை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் பார்வையிட்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

மனிதன் சமுதாயத்தில் சிறந்து விளங்க அறிவு தேவையாகிறது. இரண்டாவது இடத்தைச் சீர்தூக்கி, நேர்நிறுத்தி அதன் பெருமை குன்றாவது தொடக்க மற்றும் உயர் தொடக்கப் பள்ளி நிலைகளில் குடத்திலிட்ட விளக்காய் இருந்த மாணவர்களின் கற்றல் நிலையைக் குன்றிலிட்ட தீபமாய் ஒளிரச் செய்ததில் முழுமையான அர்ப்பணிப்பும், பங்கும் அனைவருக்கும் கல்வி இயக்கத்திற்கு உண்டு.

அனைத்துப் பள்ளிகளையும் வளர்ச்சி பெற்ற பள்ளிகளாக மாற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பணியில் முக்கியப் பங்கு வகிப்பவை கிராம கல்விக் குழு மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக்களாகும்.

பள்ளி மேலாண்மைக் குழுவின் பள்ளி சார்ந்த பொறுப்புகள் மற்றும் பள்ளியின் முன்னேற்றத்தில், அவர்களுக்குரிய ஈடுபாட்டை மேலும் மெருகூட்டும் வகையில் அவர்களுக்கு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி அனைத்துக் குழந்தைகளும் கல்வி மற்றும் வாழ்வியல் தொடர்பான செயல்பாடுகளில் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை எட்டவும், அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கவும், பள்ளியில் சேர்க்கப்பட்ட அவர்கள் அனைவரும் இடைநிற்றல் இன்றி எட்டாம் வகுப்பு முடிய கல்வி பெற வழிவகுக்கும் என்றார் அவர்.

ஆசிரியப் பயிற்றுநர்கள் குருசாமி மற்றும் முருகுதிருநாவுக்கரசு ஆகியோர் உறுப்பினர்களுக்கு மூன்று நாள் பயிற்சியை அளித்தனர். பயிற்சியில் 100-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →