சிதம்பரத்திற்கு மார்ச் 11-ல் முதல்வர் ஜெயலலிதா வருகை: 4 அமைச்சர்கள் ஆய்வு
சிதம்பரம் நகரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் ஜெயலலிதா பிப்.11-ம் தேதி வருகை தருகிறார். இதனை முன்னிட்டு 4 அமைச்சர்கள் சிதம்பரம் நகருக்கு வெள்ளிக்கிழமை வருகை
சிதம்பரம் நகரில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் ஜெயலலிதா பிப்.11-ம் தேதி வருகை தருகிறார். இதனை முன்னிட்டு 4 அமைச்சர்கள் சிதம்பரம் நகருக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்து ஹெலிபேட் மற்றும் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்படும் இடத்தை ஆய்வு செய்தனர்.
தமிழக நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, வீட்டுவசதித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கம், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவரும், கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஏ.அருண்மொழிதேவன் ஆகியோர் சிதம்பரம் நகருக்கு வருகை தந்தனர். அவர்களை தோப்பு கே.சுந்தர் தலைமையில் நகர அதிமுக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
பின்னர் அமைச்சர்கள் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்துறை வளாகத்தில் உள்ள ஹெலிபேடிற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் அங்குள்ள அறையில் கடலூர் மாவட்ட திட்ட அலுவலர் மகேந்திரன், தமிழக முதல்வரின் பாதுகாப்பு பிரிவு எஸ்பி முத்துசாமி, ஏடிஎஸ்பி ராஜராஜன், சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் காவல்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்துறை, சிதம்பரம் நகராட்சி, அண்ணாமலைநகர் பேரூராட்சி அதிகாரிகளுடன் முதல்வர் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சிதம்பரம் கீழரதவீதியில் அமைக்கப்படவுள்ள பொதுக்கூட்ட மேடை பகுதியை பார்வையிட்டு புறப்பட்டு சென்றனர்.