முகப்பு
தற்போதைய செய்திகள்

புத்தாண்டு: நெல்லை கோயில்களில் சிறப்பு பூஜை

புத்தாண்டு தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

புத்தாண்டு தினத்தையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் கோயில்களில் புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருநெல்வேலி சந்திப்பில் உள்ள வரதராஜ்பெருமாள் கோயில், நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில், நெல்லை திருப்பதி கோயில், பாளையஞ்சாலைகுமாரசுவாமி கோயில், சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோயில்களில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதேபோல் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சியில் உள்ள அகஸ்தியர் கோயில், அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவில், காசிநாதசுவாமி கோயில், சேரன்மகாதேவி வெங்கடாஜலபதி கோயில், ஆவுடையம்மாள் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →