முகப்பு
தற்போதைய செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆம் ஆத்மி அரசு வெற்றி

தில்லி சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதனை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக விவாதம்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:06 AM
பகிர்:

தில்லி சட்டமன்றக் கூட்டத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். இதனை தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக விவாதம் நடந்தது.

 அப்போது  நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரும் அமைச்சருமான சிசோடியா முன்மொழிந்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய சிசோடியா, மக்களுக்கு நாங்கள் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம்.  தில்லி மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவோம். அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தில்லி வர்த்தகங்களுக்கு ஆதரவு தெரிவிக்கப்படும் என்று பேசினார்.

இதனை தொடர்ந்து பேசிய பாஜக தலைவர் ஹர்ஸ் வர்தன் புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.இதனை தொடர்ந்து காங் தலைவர் அரவிந்த் சிங்  உட்பட பல்வேறு உறுப்பினர்கள் விவாதத்தில் பேசினார் 

இதனைதொடர்ந்து விவாதத்தில் பேசியவர்களுக்கு பதிலளித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பேசியதாவது:

ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது எமது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். நேர்மையான ஆட்சியை நடத்த ஆம் ஆத்மி கட்சி முனைப்புடன் உள்ளது. நாங்கள் எந்த கட்சிக்கும் எதிராக அரசியல் நடந்த வரவில்லை தில்லி அரசை காப்பாற்றவோ அல்லது அதிகாரத்தை காப்பாற்றவோ நான் வரவில்லை. சாதாரண மக்களின் அடிப்படை உரிமைகள் கூட கடந்த 65 ஆண்டுகளாக கிடைக்க வில்லை. ஆம் ஆத்மி கட்சியை மற்றவர்கள் குறைவாக மதிப்பிட்டுவிட்டனர் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனை தொடந்து விவாதம் முடிந்த பிறகு வாக்கெடுப்பு நடைபெற்றது.

மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 28 இடங்களில் வென்றுள்ள ஆம் ஆத்மிக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி வாக்களித்தது. மேலும் ஜக்கிய ஜனதா தளம் உறுப்பினர் இக்பால் ஆதரவாக வாக்களித்தார். இதனையடுத்து 37 பேர் ஆதரவு அளித்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.