மர்மமான முறையில் இறந்து கிடந்த பாம்பு மற்றும் ஆமைகள்
சிதம்பரம் அருகே கிள்ளையில் கடல்பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் திட்டில் 3 ஆமைகள், 2 பாம்புகள் இறந்து
சிதம்பரம் அருகே கிள்ளையில் கடல்பகுதியில் அமைந்துள்ள எம்ஜிஆர் திட்டில் 3 ஆமைகள், 2 பாம்புகள் இறந்து கிடந்தன.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதியில் தனித்தீவாக உள்ளது எம்ஜிஆர் திட்டு. 2004 ஆண்டு சுனாமிக்கு முன்பு அப்பகுதியில் மீனவர்கள் வீடுகட்டி வசித்து வந்தனர். சுனாமியில் இத்தீவு கடுமையாக பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கானோர் இறந்ததால் தற்போது யாரும் அங்கு குடியிருக்கவில்லை. அரசும் அங்கு மீனவர்கள் குடியேற அனுமதி மறுத்துள்ளது.
தற்போது பிச்சாவரம் சுற்றுலா பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு மூலம் எம்ஜிஆர் திட்டு தீவு கடற்கரைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் வியாழக்கிழமை எம்ஜிஆர் திட்டு கடற்கரையில் 3 ஆமைகள், 2 பாம்புகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. பரங்கிப்பேட்டை பகுதியில் கடற்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் கழிவுகளினால் மாசு ஏற்பட்டு ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.