முகப்பு
தற்போதைய செய்திகள்

மகளிர் சுய உதவிக்குழுத் தலைவியை தாக்கிய 7 பேர் மீது வழக்கு

புதுக்குடி காலனித் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் மனைவி சண்முகத்தாய். இவர் மகளிர் சுய உதவிக்குழுத் தலைவியாக இருந்து வருகிறார்.மகளிர் சுய உதவிக்குழுவில் ஏற்பட்ட சந்தா தொடர்பான

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:

கடையநல்லூர் அருகே மகளிர் சுய உதவிக்குழுத் தலைவியை தாக்கியதாக 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

புதுக்குடி காலனித் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் மனைவி சண்முகத்தாய். இவர் மகளிர் சுய உதவிக்குழுத் தலைவியாக இருந்து வருகிறார்.மகளிர் சுய உதவிக்குழுவில் ஏற்பட்ட சந்தா தொடர்பான பிரச்னையில், குழு உறுப்பினர்கள் மாரியம்மாள், லட்சுமி, பத்திரகாளி, பேச்சியம்மாள், சின்னத்தாய், கற்பகவல்லி, மற்றொரு பேச்சியம்மாள் ஆகியோர் சண்முகத்தாயை தாக்கினார்களாம். இது குறித்து கடையநல்லூர் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →