முகப்பு
தற்போதைய செய்திகள்

மானிய விலையில் ஆண்டுக்கு 12 சிலிண்டர்?மொய்லி பதில்

கொச்சியில் பெட்ரோநெட் நிறுவனத்தின் ஆலையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:

கொச்சியில் பெட்ரோநெட் நிறுவனத்தின் ஆலையை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை 9-ல் இருந்து 12 ஆக உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 90 சதவீத சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 9 சிலிண்டர்களை மானிய விலையில் பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,  10 சதவீதத்தினர் மட்டுமே மானியம் இல்லாத சிலிண்டர்களை வாங்குவதாகவும் கூறிய அவர், மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டமில்லை என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.