முகப்பு
தற்போதைய செய்திகள்

கங்குலி ராஜினாமா: கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்

பாலியல்புகாரில் சிக்கிய முன்னாள் நீதிபதி கங்குலி மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக உள்ளார். இந்நிலையில் இன்று

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:09 AM
பகிர்:

பாலியல்புகாரில் சிக்கிய முன்னாள் நீதிபதி கங்குலி மேற்கு வங்க மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவராக உள்ளார். இந்நிலையில் இன்று அவர் கொல்கத்தா உள்ள கவர்னரை சந்திக்க ராஜ்பவன் சென்றார. அங்கு கவர்னரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

பாலியல் பாலத்காரம் செய்ய முயன்றதாக பயிற்சி பெண் வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏகே கங்குலி மீது குற்றம்சாட்டினார்.  இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதற்கு 3நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதல் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்திருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனையடுத்து  மேற்குவங்க மாநில மனித உரிமைகள் தலைவர் பதவியில் இருந்து , கங்குலி விலக வேண்டும் என்று அம்மாநில் முதல்வர் மம்தா பானர்ஜி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

இதனைதொடர்ந்து  குடியரசுத்தலைவர்  பிரணாப் முகர்ஜி கடந்த வாரம் ஒப்புதல் வழங்கியதையடுத்து, கங்குலியை பதவி நீக்கம் செய்ய  மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் இன்று மாலை ராஜ்பவன் சென்ற கங்குலி அங்கு கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார். இதனைதொடர்ந்து வெளியே வந்த அவரிடம்ந்த ராஜினமா குறித்து செய்தியாளர்கள் எழுப்பினர் ஆனால்  பதிலளிக்க கங்குலி மறுத்துவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.