பொதுமக்கள் தொடர்பு: நெல்லையில் அரசு பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி
சென்னை அண்ணா மேலாண்மை நிலையம் மத்திய அரசு நிதியுடன் உதவியுடன் அரசு பணியாளர்கள், அலுவலர்களுக்கு தீவிர பயிற்சித் திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி அளித்து வருகிறது. திருநெல்வேலியில்
திருநெல்வேலியில் பல்வேறு துறையை சேர்ந்த அரசு பணியாளர்களுக்கு பொதுமக்கள் தொடர்பு குறித்த சிறப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.
சென்னை அண்ணா மேலாண்மை நிலையம் மத்திய அரசு நிதியுடன் உதவியுடன் அரசு பணியாளர்கள், அலுவலர்களுக்கு தீவிர பயிற்சித் திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி அளித்து வருகிறது. திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இப்பயிற்சி முகாம் தொடங்கியது.வருவாய்துறை, காவல்துறை, சுகாதாரம், வேளாண்மை, குழந்தை வளர்ச்சித் திட்டம் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 80 பேர் இப்பயிற்சியில் கலந்து கொண்டனர். பொதுமக்களுடன் சுமூகமான அணுகுமுறையை கடைபிடிப்பது, அலுவலக ரீதியான திறனை மேம்படுத்துதல், தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
செவ்வாய்க்கிழமை மேலாண்மை நிலையத் தி்ட்ட இயக்குநர் டி. பொன்னுச்சாமி, அரசு அலுவலர்கள், பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தார். புதன்கிழமை மதனமோகன், வியாழக்கிழமை தாமோதரன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவுபெறுகிறது.